ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் வாகனம் விமான நிலையத்தின் உள்ளே அனுமதி மறுக்கப்பட்டதுடன், பொதுமக்கள் செல்லும் பேருந்தில் அவரை ஏற்றி அனுப்பியது ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் தோல்வி குறித்து விஜயவாடாவில் நடந்த கட்சி கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர் அங்கிருந்து மீண்டும் ஹைதராபாத் செல்வதற்காக விமான நிலையம் வந்துள்ளார். அப்போது Z+ வகை பாதுகாப்பின் கீழ் அவர் இருக்கும்போதிலும், அவரின் வாகனம் விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை, மேலும் விமானத்தில் ஏற மற்ற பயணிகளுடன் விமான நிலைய பேருந்தில் செல்லும்படி அவரிடம் கேட்கப்பட்டது.
விமான நிலையத்தில் நடந்த இந்த நிகழ்விற்கு அக்கட்சி தொண்டர்கள் பலத்த எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இது வேண்டுமென்றே அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு விமான நிலைய அதிகாரிகள் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.