மத்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், மும்பையில் நடந்த ஐந்தாவது இந்திய பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்ட அவர் ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தன்மையைப் பற்றியும் மற்றும் ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் உர்ஜித் படேலின் செயல்பாடுகளைப் பற்றியும் கருத்து தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல் பதவி விலகியதை தொடர்ந்து, முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சக்கி காந்த் தாஸ் ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். நிதி அமைப்பை மேம்படுத்த இவர் எடுக்கபோகும் நடவடிக்கைகள்தான் ரிசர்வ் வங்கியின் சுதந்திரமான செயல்பாடுகளை பாதிக்குமா என்பதை தீர்மானிக்கும். உர்ஜித் படேல் அவரது பதவி காலத்தில் மிகச்சரியான முடிவுகளை எடுத்து சிறப்பாக செயல்பட்டார். குறிப்பாக வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் தனியார் வங்கிகளை திறமையாக கையாண்டார். வங்கிகள் சுதந்திரமாக நிதி வழங்க, ரிசர்வ் வங்கியின் அது சார்ந்த கொள்கைகளை தளர்த்த மத்திய அரசு விரும்புகிறது. மற்றும் வங்கி சாராத நிதி நிறுவனங்களுக்கு அதிக நிதி கிடைக்கவும் விரும்பியது. இதற்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளிக்கவில்லை, உர்ஜித் படேல் ரிசர்வ் வங்கியின் சட்ட திட்டங்களை பலப்படுத்தினார். என்று தெரிவித்துள்ளார்.