Published on 13/03/2022 | Edited on 13/03/2022
முதுநிலை நீட் தேர்வில் அனைத்து பிரிவினருக்கான கட் ஆஃப் மதிப்பெண் 15 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய பொது சுகாதாரத்துறை சேவை இயக்ககம் அறிவித்துள்ளது.
மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியத்திற்கு பிறப்பித்துள்ள உத்தரவில் அனைத்து பிரிவினருக்கும் 15 விழுக்காடும், பொதுப் பிரிவினருக்கு 35 விழுக்காடும், மாற்றுத்திறனாளிகளுக்கு 30 விழுக்காடும் கட் ஆஃப் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியல் பிரிவினருக்கு கட் ஆஃப் 25 விழுக்காடாகவும் குறைக்கப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட கட் ஆஃப் மதிப்பெண் அடிப்படையில், புதிய தேர்வு முடிவுகளை வெளியிட்டு, பட்டியலை அனுப்பி வைக்க மத்திய பொது சுகாதாரத்துறை சேவை இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.