Published on 29/06/2020 | Edited on 29/06/2020
டிக் டாக் உள்ளிட்ட சீன நிறுவனங்களின் 59 செல்போன் செயலிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. சீன நிறுவனத்தின் டிக் டாக், விசாட், யூசி ப்ரவுசர், ஹலோ, ஷேரிட் என இந்தியாவில் அதிகம் பயன்படுத்தும் சீன செயலிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி தடை விதித்துள்ளது.
இந்திய, சீன எல்லையான லடாக்கில் எல்லை தொடர்பான பிரச்சனைகள் தொடர்ந்து வரும் நிலையில், செயலிகள் மூலம் இந்தியா தொடர்பான தகவல்களை சீனா பெறுவதாக எழுந்த சர்ச்சையை அடுத்து தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.