மத்திய சுகாதரத்துறை செயலாளர் அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில், கோவிஷீல்டு தடுப்பூசி 2வது டோஸ் செலுத்துவதற்கான கால இடைவேளை 4 வாரங்களாக இருந்தது. இதனைத் தற்போது மத்திய அரசு 6 வாரம் முதல் 8 வாரங்களாக மாற்றி அறிவித்துள்ளது. முதல் டோஸ் போட்டுக்கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் மேற்குறிப்பிட்டுள்ள கால இடைவேளைவிட்டுத்தான் போட வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
இந்த கால இடைவேளை நீட்டிப்புக்கு காரணம் தெரிவித்துள்ள மத்திய அரசு, கூடதலாக கால அவகாசம் எடுத்து இரண்டாவது டோஸ் எடுத்துக்கொள்ளும்போது மருந்து கூடுதல் பலம் அளிப்பதாக தெரிவித்துள்ளது. தேசிய தடுப்பூசி குழுவின் சிறப்பு உறுப்பினர்கள், தொழில்நுட்ப ஆலோசனைக் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த கால அவகாசம் நீட்டிப்பு கோவிஷீல்டு தட்ப்பூசிக்கு மட்டுமே பொருந்தும் என்றும் கோவாக்ஸினுக்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.