Published on 04/08/2018 | Edited on 04/08/2018
மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூகஊடங்களில் பொய் செய்திகளை பரப்பும் 700 முகவரிகளை முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் இதுகுறித்து அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது. மத்திய அரசு, சமூக ஊடகங்களில் வதந்தி பரவுவதை தடுக்க தொழிநுட்பத் தீர்வுகளை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொண்டது. இதனால், பொய் செய்திகள் காரணமாக சுமார் 700 முகவரிகளை சமூக ஊடக நிறுவனங்கள் முடக்கியுள்ளது. இந்த ஆண்டு ஜூன் வரை 499 முகவரிகளை பேஸ்புக் முடக்கியுள்ளது. இதுபோல் யூட்யூப் (57), ட்விட்டர் (88), இன்ஸ்டாகிராம் (25), டம்ப்ளர் (28) சார்பிலும் இணைய முகவரிகள் முடக்கப்பட்டுள்ளன என்றார்.