Published on 07/09/2020 | Edited on 07/09/2020
இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. மராட்டியத்தில் 5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதேபோன்று கேரளாவில் கரோனா பாதிப்பு குறைவாக இருந்த நிலையில், தற்போது கணிசமான அளவு உயர்ந்து வருகின்றது.
இந்நிலையில், கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக்கிற்கு தற்போது கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது அலுவலகம் இதைனை தற்போது உறுதி செய்துள்ளது. மேலும் அமைச்சர் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். கேரளாவில் அமைச்சர் ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை ஆகும். தமிழகத்தில் 5க்கும் மேற்பட்ட அமைச்சர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.