Skip to main content

சிபிஐ அதிகாரியையும் மிரட்டும் காவித் தீவிரவாதம்!

Published on 07/09/2017 | Edited on 07/09/2017
சிபிஐ அதிகாரியையும் மிரட்டும் காவித் தீவிரவாதம்!

பத்திரிகையாளர்கள், மதவெறி எதிர்ப்பாளர்களை ஒரேமாதிரியாக கொலை செய்யும் காவித்
தீவிரவாதிகள், அதுதொடர்பாக செய்திகள் வெளியிடும் செய்தியாளர்களையும், விசாரணை நடத்தும் சிபிஐ அதிகாரிகளையும் மிரட்டுவதாக ஆஷிஷ் கேத்தன் என்ற பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி தலைவராகவும் இருக்கும் ஆஷிஷ் இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தனக்கு வந்த ஒரு மிரட்டல் கடிதத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த நரேந்திர தபோல்கர் கொலை வழக்கை விசாரிக்கும் நந்தகுமார் நாயர் என்பவர் பெயரைக் குறிப்பிட்டு, இந்து மத அமைப்புகளுக்கு எதிராக செயல்படும் பத்திரிகையாளர்கள், சிபிஐ அதிகாரிகள் அனைவரையும் மிரட்டும் வகையில் இரண்டு கடிதங்கள் தனக்கு வந்ததாக ஆஷிஷ் கூறியுள்ளார்.

தங்களுக்கு எதிராக செயல்படும் அனைவருக்கும் தபோல்கர், கோவிந்த் பன்சாரே ஆகியோருக்கு நேர்ந்த கதிதான் என்று அந்தக் கடிதங்களில் மிரட்டியிருப்பதாக அவர் தெரிவித்தார்.

சார்ந்த செய்திகள்