Skip to main content

கற்பழிப்பு வழக்கில் சாமியார் குற்றவாளி என்று தீர்ப்பு!

Published on 25/08/2017 | Edited on 25/08/2017
கற்பழிப்பு வழக்கில் சாமியார் குற்றவாளி என்று தீர்ப்பு! 

இரண்டு பெண்களை கற்பழித்ததாக தொடரப்பட்ட வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கை குற்றவாளி என்று பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து அவருடைய ஆதரவாளர்கள் பயங்கர வன்முறையில் ஈடுபட்டனர்.



இன்று சாமியாருக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டால் இரண்டு மாநிலங்களிலும் பயங்கர வன்முறை ஏற்படும் என்று கடந்த சில நாட்களாகவே எதிர்பார்க்கப்பட்டது. இரண்டு மாநில அரசுகளும் பாதுகாப்பை அதிகப்படுத்தின. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில்கள் நிறுத்தப்பட்டன. போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

15 கம்பெனி துணை ராணுவம் அனுப்பப்பட்டது. இருந்தாலும் சாமியாரின் ஆதரவாளர்கள் சண்டீகரில் குவியத் தொடங்கினர். இவர்கள் எப்படி அனுமதிக்கப்பட்டார்கள் என்பது கேள்விக்குறியாக தொடர்கிறது.

சாமியார் நீதிமன்றத்திற்கு வரும்போது 100 கார்களில் ஆதரவாளர்களோடு வருகிறார். அதையும் போலீஸார் அனுமதித்தனர். இந்நிலையில் சாமியார் குற்றவாளி என்று உறுதிசெய்த நீதிமன்றம், அவருக்கான தண்டனையை 28 ஆம் தேதி அறிவிப்பதாக தெரிவித்துள்ளது.

குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவுடன் குர்மீத்தின் ஆதரவாளர்கள் பஞ்சாபில் உள்ள ரயில் நிலையத்திற்கும் போக்குவரத்து வாகனங்களுக்கும் தீ வைத்தனர். கலவரக்காரர்களை அடக்க ராணுவம் களத்தில் உள்ளது. கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் கலவரக்காரர்களை கலைக்க முயற்சித்தனர்.

கலவரம் கட்டுக்கடங்காமல் சென்றுகொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

- ஆதனூர் சோழன்

சார்ந்த செய்திகள்