Published on 27/04/2022 | Edited on 27/04/2022

எல்ஐசி நிறுவனத்தின் பங்கு விற்பனை மே 4- ஆம் தேதி தொடங்கும் என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் பங்கு விற்பனை மே 4- ஆம் தேதி தொடங்கி மே 9- ஆம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்கு ஒன்றுக்கு ரூபாய் 902 முதல் ரூபாய் 949 என்ற விலையில் மொத்தம் 22 கோடியே 13 லட்சம் பங்குகள் விற்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்ஐசி பாலிசி வைத்திருப்பவர்கள் ரூபாய் 60 தள்ளுபடி விலையில் பங்குகள் விற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்ஐசியின் 3.5% பங்குகளை விற்பதன் மூலம் ரூபாய் 21,000 கோடி வரை திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. எல்ஐசியின் பங்குகள் மே 17- ஆம் தேதி அன்று பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.