Published on 06/02/2020 | Edited on 06/02/2020
புதுச்சேரி மத்திய சிறையில் கைதிகளின் அறையில் இருந்து 12 செல்போன்கள், சிம்கார்டுகள், கஞ்சா உள்ளிட்டவைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். பிரபல ரவுடிகள் சோழன், அஸ்வின் உள்ள விசாரணை கைதிகள் அறையில் போலீசார் நடத்திய சோதனைகளில் இவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே புதுச்சேரி சிறையில் இருந்து செல்போனில் பேசிய ஒரு கைதி புதுவை துணை நிலை ஆளுநர் மாளிகைக்கு மிரட்டல் விடுத்திருந்தார். கைதி செல்போன் பயன்படுத்தியதால் 7 சிறைக்காவலர்கள் சஸ்பெண்ட் ஆன நிலையில் மீண்டும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.