Published on 02/05/2022 | Edited on 02/05/2022

உஸ்மானியா பல்கலைக்கழகத்துக்கு காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி வருவதற்கு தடை விதிக்கப்பட்டது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்று உஸ்மானியா பல்கலைக்கழகம். வரும் மே 7- ஆம் தேதி அன்று அரசியல் அல்லாத நிகழ்ச்சி ஒன்றை இங்கு நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில், ராகுல் காந்தி கலந்து கொள்வதற்கு பல்கலைக்கழக நிர்வாகம், ஒப்புதல் தர மருத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, எழுத்துப் பூர்வமாகத் தெரிவிக்கப்படாத நிலையில், பல்கலைக்கழக நிகழ்ச்சியில் ராகுல்காந்தியை அனுமதிக்க உத்தரவிடக்கோரி மாணவர்கள் சிலர் தெலங்கானா உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.