Published on 20/05/2024 | Edited on 20/05/2024
தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாகக் கவிழ்ந்ததில் 18 பேர் உயிரிழந்த சம்பவம் சத்தீஸ்கரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் கவர்தாவில் பஹ்பானி என்ற கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தில் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ஒரு சரக்கு வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது திடீரென கட்டுப்பாட்டை இழந்த வாகனம் தலைகுப்புற விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காயத்துடன் மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சத்தீஸ்கரில் நிகழ்ந்த இந்தப் பெரும் விபத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது
வாசகர்கள் சாய்ஸ்: அடுத்த 3 மணி நேரத்தில் 30 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை