
மேற்கு வங்க மாநிலம் அசான்சோல் என்னும் பகுதியில், மாற்றுத்திறனாளிகளுக்கு உபயோகப்படும் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் பப்புல் சுப்ரியோ, "மேடை முன்பு நடந்துகொண்டிருந்ததால், காலை உடைத்துவிடுவேன்" என்று மிரட்டியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மேடையில் பப்புல் பேசிகொண்டிருக்கும் போது திடிரென,” ஏன் நகர்கிறாய், ஒரு இடத்தில் அமரு” என்றார். பின், ”உனக்கு என்ன ஆனது, எதுவும் பிரச்சனையா, உட்காரு இல்லையென்றால் காலை உடைத்துவிடுவேன்” என்று மிரட்டியுள்ளார்.
அமைச்சர் தன்னுடைய பாதுகாவலரிடம்,” இனி அவர் நகர்ந்தால், அவர் காலை உடைத்து, பிடித்து போக கைதடி கொடுத்துவிடு என்றார். உடனடியாக அங்கிருக்கும் பார்வையாளர்களை பார்த்து, ’அவருக்கு கைத்தட்டுங்கள்’ என்று கூறியுள்ளார்.
பப்புல் அமைச்சாரவதற்கு முன்பு படகாரக இருந்தவர். இவர் ஏற்கனவே பொது மேடையில் இதுபோன்று கோபமாக பேசியிருக்கிறார். கடந்த மார்ச் மாததில் ராமநவமி பண்டிகையின் போது, ஒரு பகுதியில் இனவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த இடத்திற்கு சென்ற பப்புல், குறிப்பிட்ட மக்களை மட்டும் ’தோலை உறித்துவிடுவேன்’ என்றுள்ளார்.