மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இத்தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 27ஆம் தேதி நடைபெற்றது. இந்தநிலையில், சட்டப்பேரவை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (01.04.2021) நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில், நந்திகிராம் தொகுதியின் ஒரு வாக்குச்சாவடிக்கு வருகை தந்த மம்தா, உள்ளூர் மக்கள் வாக்களிக்க அனுமதி மறுக்கப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். வாக்குச்சாவடியில் இருந்தவாறே மேற்கு வங்க ஆளுநருக்குத் தொலைபேசியில் அழைப்பு விடுத்த மம்தா பானர்ஜி, “உள்ளூர் மக்கள் வாக்களிப்பதற்கு அனுமதி மறுக்கப்படுகிறார்கள். காலையிலிருந்து பிரச்சாரம் மேற்கொண்டேன். இப்போது உங்களிடம் முறையிடுகிறேன். தயவு செய்து இதைப் பாருங்கள்" என்றார்.
குறிப்பிட்ட அந்த வாக்குச்சாவடியில், திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களுக்கும் இடையே மோதல் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.