Skip to main content

இனி பாலியல் குற்றத்தில் சிக்கினால் ஓட்டுநர் உரிமம் உட்பட பின்வரும் அனைத்தும் ரத்து??!!

Published on 13/07/2018 | Edited on 13/07/2018

 

பாலியல் குற்றங்களில் சிக்கி நிரூபிக்கப்பட்டால் குற்றம் சுமத்தப்பட்டவரின் ஓட்டுநர் உரிமம்  ரத்து செய்யப்படும்  என அரியானா முதல்வர்  தெரிவித்துள்ளார்.

 

அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் அரியனாவில் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கான பாதுகாப்பு பயிற்சி வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி பேசுகையில்,

CM

 

 

 

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்ற சூழலில் கண்டிப்பாக பெண் பாதுகாப்பு முக்கியமானது. இனி பாலியல் குற்றங்களில் சிக்கி நிரூபிக்கப்பட்டால் குற்றவாளியின் ஓட்டுநர் உரிமம், துப்பாக்கி உரிமம், மாற்றுத்திறனாளியாக இருந்தால் ஓய்வு  ஊதியம் ரத்து, வயதானோர்களுக்கு ஓய்வு ஊதியம் ரத்து. ரேஷன் உரிமம் மட்டும் வழங்கப்படும். மற்ற அனைத்தும் பாலியல் குற்றத்திற்கான தண்டனை நிறைவேற்றும் வரும் இடைநீங்கத்திலேயே இருக்கும். இந்த புதிய முறை வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் அல்லது ஆகஸ்ட் 26 தேதி ரக்ஷா பந்தன் அன்று அரியானாவில் அமலுக்கு வரும் எனகூறினார்.

 

மேலும் பாலியல் குற்றங்களை விரைவில் விசாரிக்க புதிய விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்