வருகைப்பதிவேடு அழைப்பிற்கு மாணர்வர்கள் ‘ஜெய்ஹிந்த்’ சொல்லவேண்டும்!
பள்ளிமாணவர்கள் வருகைப்பதிவேடு அழைப்புகளுக்கு ‘ஜெய்ஹிந்த்’ என சொல்லவேண்டுமென மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அர்ஜூன் ஷா தெரிவித்துள்ளார்.
மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் பள்ளிகல்வித்துறை அமைச்சர், சட்னா மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் மாணவர்கள் வருகைப்பதிவேட்டிற்கு ‘ஜெய்ஹிந்த்’ என சொல்லவேண்டுமென உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், இது பரிந்துரை மட்டுமே. தேசப்பற்றோடு இது தொடர்புடைய விஷயமென்பதால், மாணவர்கள் நிச்சயம் கடைபிடிப்பார்கள் என எதிர்பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார். மேலும், இது ஒரு முன்னோட்டம்தான் இருந்தாலும், மாநிலம் முழுவதும் இதை நடைமுறைப்படுத்த மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு பரிந்துரை செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
அர்ஜூன் ஷாவின் இந்த கருத்தின் மூலம் தேசப்பற்று திணிக்கப்படுவதாக பொதுத்தளத்தில் விவாதம் எழுந்துள்ளது.
- ச.ப.மதிவாணன்