Skip to main content

பேருந்து விபத்தில் 45 பேர் பலி - நிவாரணத் தொகை அறிவிப்பு!

Published on 16/02/2021 | Edited on 16/02/2021

 

pm modi

 

மத்தியப் பிரதேச மாநிலம், சிதி பகுதியில் இருந்து சத்னாவிற்கு, 54 பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்தை ஒட்டிய ஓட்டுநர் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததால், இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களில் ஏழு பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். விபத்தில் சிக்கிய மற்றவர்களையும் மீட்கும் பணிகள் நடைபெற்று வந்தது.

 

இந்தநிலையில், தற்போது மீட்புப் பணிகள் நிறைவடைந்துவிட்டதாகவும், இந்த விபத்தில் 45 பேர் பலியாகியுள்ளதாகவும் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், "மீட்புப்பணிகள் முடிவடைந்துவிட்டன. 45 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது துரதிர்ஷ்டவசமானது" எனத் தெரிவித்துள்ளார்.

 

இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரமும் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும், மத்தியப் பிரதேச அரசு, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் வழங்கும் என அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். மேலும் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் உடனடியாக வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்