Published on 07/08/2021 | Edited on 07/08/2021

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இந்தியா இதுவரை ஐந்து பதக்கங்களை வென்றுள்ளது. பளுதூக்குதலில் மீராபாய் சானுவும், மல்யுத்தத்தில் ரவிக்குமார் தஹியாவும் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளனர். பெண்களுக்கான குத்துச்சண்டையில் லோவ்லினாவும், பேட்மிண்டனில் சிந்துவும் வெண்கலப் புத்தகத்தை வென்றுள்ளனர். இந்திய ஆடவர் ஹாக்கி அணியும் வெண்கலத்தை வென்றுள்ளது.
இந்தநிலையில், மகளிருக்கான கோல்ஃப் போட்டி இன்று (07.08.2021) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியாவின் அதிதி அஷோக் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. அதிதி அஷோக்கும் மூன்று சுற்றுகளின் முடிவில் இரண்டாவது இடத்தில் இருந்தார். ஆனால் கடைசி சுற்றில் அதிதி அஷோக் நான்காவது இடத்தைப் பிடித்து ஏமாற்றமளித்தார். இதனால் அவர் பதக்கத்தை இழந்தார்.