Published on 28/12/2023 | Edited on 28/12/2023

மத்திய பிரதேச மாநிலம் குனா பகுதியில் தனியார் பேருந்து ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. அதில், ஏராளமான பயணிகள் பயணித்து வந்தனர். அப்போது, எதிரே வந்த டிப்பர் லாரி மீது பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக திடீரென அந்த பேருந்து தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில், அந்த பேருந்தில் இருக்கக்கூடிய பலரும் படுகாயமடைந்தனர்.
இதனை கண்ட அங்கிருந்தவர்கள், காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸுக்கு அழைத்து அருகில் இருக்கக்கூடிய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில், இந்த விபத்தில் சிக்கிய 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 17 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர்கள் சாய்ஸ்: ‘குரூப்-7ஏ தேர்வர்கள் கவனத்திற்கு’ - டி.என்.பி.எஸ்.சி முக்கிய அறிவிப்பு
இதனையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்த மத்திய பிரதேச மாநில முதல்வர் மோகன் யாதவ், அவர்களுக்கு இழப்பீடாக ரூ.4 லட்சம் அறிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 இழப்பீடாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.