காதலர் தினத்தை முன்னிட்டு சரணடைந்த 15 நக்சலைட்டுகளுக்குக் காவல்துறையினர் திருமணம் செய்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் என்பது மிக அதிகம். அடிக்கடி வெடிகுண்டு உள்ளிட்ட தீவிரவாத தாக்குதல்கள் அந்த மாநிலத்தில் சகஜமாக நடைபெறும். குறிப்பாக சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் மிக அதிகம். இந்நிலையில் பல்வேறு தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட அம்மாவட்டத்தைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட நக்சலைட்கள் ஆயுதங்களை ஒப்படைந்து காவல்துறையிடம் சரணடைந்தனர். இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு 15 நக்சலைட்டுகளுக்கு அம்மாநில போலீசார் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இந்தச் சம்பவம் மற்ற நக்சலைட்டுகள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களும் திருந்தி, குடும்ப வாழ்வுக்கு வருவார்கள் என்று காவல்துறை தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.