உலகின் பல்வேறு நாடுகளில் கரோனா தடுப்பூசிக்குப் பூஸ்டர் டோஸ்களை செலுத்த தொடங்கியுள்ளன. இதனையொட்டி இந்தியாவிலும் பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்த சூழலில், அண்மையில் இதுதொடர்பாக விவாதிக்க கூட்டம் நடைபெற்றது. ஆனால், அதில் எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி வரும் 10ம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படும் என்று அறிவித்தார். மேலும் 15 முதல் 18 வயது உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் யாருக்கு, எந்த அடிப்படையில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதனடிப்படையில் முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை விளக்கமளித்துள்ளது. மேலும், இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடப்பட்டு 39 வாரங்கள் கழித்து இந்த பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.