எழுபது சதவீதத்திற்கு அதிகமாக சிறுபான்மை மாணவர்கள் பயிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் அமர்ந்து சாப்பிட வசதியாக இருக்கைகள் உள்ள உணவு அரங்குகள் கட்டுவதற்கு மேற்கு வங்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
மேலும், "சிறுபான்மை மாணவர்கள் அதிகமாக பயிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டும் உணவுக் கூடங்கள் அமைத்து மத மோதலை உருவாக்கப் பார்க்கிறது. மேற்கு வங்க அரசு. இதை நாங்கள் வன்மையாக எதிர்க்கிறோம். மத அடிப்படையில் மாணவர்களிடையே பாகுபாட்டை உருவாக்க முயற்சிக்கிறார் முதல்வர் மம்தா பானர்ஜி. இதன்பின்னால் ஏதாவது சதித்திட்டம் இருக்கும்" என மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஆனால் இவரது குற்றசாட்டை மறுத்துள்ள திரிணாமூல் காங்கிரஸ், இதனால் அணைத்து மாணவர்களும் தான் பயன்பெறுவார்கள். அடிப்படை வசதிகளை தான் மேம்படுத்தி வருகிறோம் என கூறியுள்ளார்.