Published on 07/07/2021 | Edited on 07/07/2021

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று (07.07.2021) விரிவாக்கம் செய்யப்படுகிறது. இன்று மாலை ஆறு மணிக்குப் புதிய அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அமைச்சரவை விரிவாக்கத்தில் புதிதாக சிலர் அமைச்சராவார்கள் எனவும், சில அமைச்சர்களின் துறைகள் மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் பல்வேறு துறைகளைச் சார்ந்த அமைச்சர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகனும் பங்கேற்றுள்ளார். அவர் அமைச்சராவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.