உத்தரப் பிரதேச மாநிலம், பிஜ்னோர் பகுதியைச் சேர்ந்தவர் கபில் குமார். இவருடைய மனைவை ஆதேஷ் தேவி. இந்த தம்பதியினருக்கு 4 வயதில் மகன் உள்ளான். இந்த நிலையில், கபில் குமார் வழக்கம் போல் பணிக்காக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
அந்த சமயத்தில், ஆதேஷ் தேவி வீட்டில் இருந்த கத்தியை கொண்டு தனது 4 வயது மகனின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளான். அதன் பின்னர், வீட்டிற்குள் உள்ள ஒரு அடுப்பில் குழந்தையின் உடலை எரிக்க முயன்றுள்ளார். அந்த நேரத்தில், ஆதாஷ் தேவியின் கணவர் கபில் குமார் வேலை முடிந்து வீடு திரும்பியபோது மகன் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும், அவர் உடனடியாக தனது குடும்பத்தினரை உதவிக்காக அழைத்தார்.
குடும்ப உறுப்பினர்கள் வந்ததும், ஆதாஷ் தேவி, மண்வெட்டியுடன், அவர்களையும் கபில் குமாரையும் வீட்டை விட்டு விரட்டியுள்ளார். இந்த கொடூரச் சம்பவம் குறித்து கபில் குமார் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அவர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், குழந்தையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கபில் குமாரின் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆதாஷ் தேவி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அந்த விசாரணையில் ஆதாஷ் தேவி மனநலம் சரியில்லாதவர் என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற தாயே தனது 4 வயது மகனைக் கழுத்து அறுத்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.