Skip to main content

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மரணம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Published on 08/12/2021 | Edited on 08/12/2021

 

bipin rawat

 

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பிபின் ராவத் உயிரிழந்துள்ளார். இதனை இந்திய விமானப்படை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

 

இந்த விபத்தில் பிபின் ராவத்தோடு பயணித்த அவரது மனைவியும், 11 இராணுவ அதிகாரிகளும் உயிரிழந்துள்ளனர். பிபின் ராவத்தின் மறைவுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் இன்று நடந்த மிகவும் துரதிர்ஷ்டவசமான ஹெலிகாப்டர் விபத்தில், முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 இராணுவ அதிகாரிகள் திடீரென மரணம் அடைந்தது மிகுந்த வேதனையை அளிக்கிறது.

 

அவரது அகால மரணம் நமது ராணுவத்துக்கும் நாட்டுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு. ஜெனரல் ராவத் நாட்டிற்கு தனித்துவமான தைரியத்துடனும் தளரா ஊக்கத்துடனும் சேவையாற்றினார். முதல் முப்படை தலைமை தளபதியாக நமது ஆயுதப் படைகளின் கூட்டாண்மைக்காண திட்டங்களைத் தயாரித்திருந்தார்.

 

இந்த விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பங்களை சுற்றியே எனது நினைவுகள் இருக்கிறது. வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வரும் கேப்டன் வருண் சிங் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.  

 


 

சார்ந்த செய்திகள்