Skip to main content

பீகாரில் கோர விபத்து - 12 பேர் பலி

Published on 21/11/2022 | Edited on 21/11/2022

 

BIHAR LORRY INCIDENT PEOPLES FUND ANNOUNCED PM AND CM

 

பீகாரில் பக்தர்கள் கூட்டத்தில் லாரி புகுந்ததில் சுமார் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

 

பீகார் மாநிலம், வைஷாலி மாவட்டத்தில் சுல்தான்பூர் என்ற கிராமத்தில் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலையோரம் உள்ள கோயிலில் வழிபாட்டிற்காக பக்தர்கள் கூடியிருந்தனர். அப்போது, அந்த வழியே வேகமாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து பக்தர்கள் கூட்டத்தில் புகுந்தது. இந்த கோர விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலும், 3 பேர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலும் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

 

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளனர். 

 

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். அதேபோல், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 5 லட்சம் நிவாரணம் வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சையை வழங்கவும் அம்மாநில முதலமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்