பீகார் மாநிலத்தில் மீண்டும் ஆட்சியமைக்கிறது பா.ஜ.க. மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி.
பீகார் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று (10/11/2020) காலை தொடங்கிய நிலையில், முழுமையான தேர்தல் முடிவுகள் இன்று (11/11/2020) அதிகாலை வெளியானது.
பீகார் மாநிலத்தில் மொத்தமுள்ள 243 சட்டப்பேரவை தொகுதிகளில் 125 தொகுதிககளில் பா.ஜ.க. மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது.
பா.ஜ.க.- ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி: பா.ஜ.க. 74 தொகுதிகளிலும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 43 தொகுதிகளிலும், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா 4 தொகுதிகளிலும், விகாஸ்சீல் இஷான் கட்சி 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
லாலுபிரசாத் மகன் தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி 110 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
ராஷ்ட்ரீய ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி: ராஷ்ட்ரீய ஜனதா தளம்- 75, காங்கிரஸ்-19, சி.பி.ஐ. (ML)- 12, சி.பி.ஐ- 2, சி.பி.எம்.- 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
தனித்து போட்டியிட்ட ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன சக்தி- 1 தொகுதியிலும், மற்ற கட்சிகள் மற்றும் சுயேட்சைகள்- 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.