வங்கி மோசடி வழக்கு: 2 இயக்குநர்களுக்கு ஜாமீன்மறுப்பு
புதுடெல்லி ரக்ஷா குளோபல் ஸ்டீல் நிறுவனத்தின் இயக்குநர்களாக சுமித் சிங்களா, விகாஸ் சிங்களா இருவரும் பல வங்கிகளில் 108 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளனர். இந்த இரு இயக்குநர்கள், பொது துறை வங்கி அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிந்தது. இதில் ஒரு வழக்கு கனரா வங்கியில் செய்யப்பட்ட மோசடியான 24.64 கோடியாகும். இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளதால் தங்களை ஜாமீனில் விட வேண்டும் என இருவரும் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி வீரேந்தர் குமார் கோயல், ஜாமீன் தர மறுத்து உத்தரவிட்டார்.