Skip to main content

'நான் ஏன் கட்டணும்; அரசு இலவசமா தருது...' - மின் வாரிய அதிகாரிகளைத் தாக்கிய வாலிபர் 

Published on 25/05/2023 | Edited on 25/05/2023

 

bangalore viral video eb bill pending related issue 

 

கர்நாடக மாநிலம் கொப்பள் மாவட்டத்தில் குக்கன்பள்ளி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சந்திரசேகரையா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 6 மாதங்களாகத் தனது வீட்டின் மின் கட்டணத்தைச் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மின்சார வாரியத்தில் இருந்து மின்துறை அதிகாரிகள் சந்திரசேகரையா வீட்டிற்கு வந்துள்ளனர். மேலும் அவர் 9 ஆயிரம் ரூபாய் அளவுக்கு வைத்துள்ள நிலுவைத் தொகையைச் செலுத்துமாறு சந்திரசேகரையாவிடம் கூறியுள்ளனர். அதற்கு அவர், நான் மின்சார கட்டணத்தைச் செலுத்தமாட்டேன். வீடுகளுக்கு மின்சாரம் இலவசம் என்று அரசு அறிவித்து விட்டது எனக் கூறி மின்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் தகராறும் செய்துள்ளார்.

 

இதனைத் தொடர்ந்து அவர் மின் கட்டணத்தைச் செலுத்தாத காரணத்தினால், நேற்று மின்சாரத்துறை அதிகாரிகள் இருவர் அவரது வீட்டில் மின்சார இணைப்பைத் துண்டிக்கச் சென்றுள்ளனர். அப்போதும் அவர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன் பிறகு தனது காலில் இருந்த செருப்பை எடுத்து அதிகாரிகளைத் தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தை வீடியோ எடுத்தவரையும் சந்திரசேகரையா தாக்க முயன்றார்.

 

இதுகுறித்து மின்துறை அதிகாரிகள் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரசேகரய்யாவை கைது செய்தனர். தற்போது இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்