உலகின் மிக நீளமான அடல் சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி நாளை (03/10/2020) நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.
ரோட்டங்கில் உள்ள அடல் சுரங்கப்பாதையை நாளை (03/10/2020) காலை 10.00 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். இமாச்சலின் மணாலிக்கும் லடாக்கின் லே பகுதிக்கும் இடையே 9.02 கி.மீ. நீளத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரிய நாட்டின் தொழில்நுட்ப அடிப்படையில் ரூபாய் 4,000 கோடி மதிப்பில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
10 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்ட இருவழிப்பாதை கடல் மட்டத்தில் இருந்து 3,100 மீட்டர் உயரத்தில் உள்ளது. ஒவ்வொரு 60 மீட்டர் தொலைவில் சி.சி.டி.வி.யும், 500 மீட்டர் தொலைவில் அவசர கால வெளியேறும் பாதையும் அமைக்கப்பட்டுள்ளது.
புதிய அடல் சுரங்கப்பாதையின் மூலம் மணாலி- லே இடையேயான பயண தூரம் 46 கி.மீ. குறையும் என்று அதிகாரிகள் கூறுகின்றன. மேலும், குதிரை லாடத்தின் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதையில் 3,000 கார்கள், 1,500 லாரிகள் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.