Published on 10/07/2020 | Edited on 10/07/2020
ஆசியாவிலேயே மிகப்பெரிய சூரிய மின்சக்தி நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொளியில் திறந்து வைத்தார்.
மத்தியபிரதேசம் மாநிலம், ரேவாவில் கட்டப்பட்ட சூரிய மின்சக்தி நிலையத்தை நாட்டுக்கு பிரதமர் அர்ப்பணித்தார். 750 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில் 500 ஏக்கரில் சூரியமின் சக்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. புதிய சூரியமின் சக்தி நிலையத்தால் 15 லட்சம் டன் கரியமில வாயு தடுக்கப்படும். புதிய சூரிய மின்சக்தி நிலையத்தின் மின்சாரத்தில் 24% டெல்லி மெட்ரோ நிறுவனத்துக்கு வழங்கப்படும். எஞ்சிய 76% மின்சாரம் மத்திய பிரதேச மின்பகிர்மான நிறுவனங்களுக்கு வழங்கப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் மற்றும் மத்திய அமைச்சர்கள், மணிலா அமைச்சர்கள், உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.