Published on 24/08/2019 | Edited on 24/08/2019
முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அருண் ஜெட்லி(வயது 66) , உடல்நலக்குறைவினால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலாமனார்.
மூச்சுத்திணறல் காரணமாக கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அருண்ஜெட்லி. தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரி விதிப்பை அமல்படுத்தியவர் அருண் ஜெட்லி. வங்கி, பான் எண்ணுடன் ஆதார் எண்ணையும் இணைக்கும் நடவடிக்கையை திறமையுடன் மேற்கொண்டவர் அருண் ஜெட்லி.