Published on 23/08/2018 | Edited on 23/08/2018

சிறுநீரக பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அருண்ஜெட்லி நிதி அமைச்சர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார். அவரது நிதி மற்றும் கார்ப்ரேட் நலத்துறைகள் பொறுப்புகளை மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் பார்த்துக்கொண்டார். கடந்த மே மாதம் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முடிந்ததை அடுத்து உடல்நலம் அடைந்துள்ள நிலையில் அருண்ஜெட்லிக்கு அவரது நிதி அமைச்சர் பொறுப்பு திரும்ப தரப்பட்ட இருக்கிறது.
பிரதமரின் பரிந்துரைபடி குடியரசு தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.