கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் வனப்பகுதி கிராமங்களில் மிகவும் பிரபலமானது அரிக்கொம்பன் யானை. அரிசியை விரும்பிச் சாப்பிடும் இந்த யானை யானைக்கு அரிக்கொம்பன் என பெயர் வந்தது. திடீர் திடீரென ஊருக்குள் புகுந்து வயல்களை சேதப்படுத்தும் இந்த அரிக்கொம்பன் யானை மக்களை தாக்கியதாகவும் பல உயிரிழப்புகள் ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அரிக்கொம்பன் என்ற பெயரை கேட்டாலே மக்கள் அச்சத்தில் உறையும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரம் மறுபுறம் கேரளாவை கலக்கி வரும் அந்த யானைக்கு ரசிகர்கள் கூட்டமும் அதிகரித்துள்ளது. மூணாறு பகுதியில் 'அரிக்கொம்பன் டீ ஸ்டால்' என ஒருவர் கடை திறந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ளார். அதேபோல் ஆட்டோ ஓட்டுநர்கள் ஒன்று சேர்ந்து ரசிகர் மன்றத்தையும் துவங்கி அதற்கான பேனரை வைத்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் சலசலப்பு ஏற்பட்ட நிலையில் போலீசார் தலையிட்டு அந்த பேனரை அகற்றியுள்ளனர்.