Skip to main content

‘ஆன்டி இந்தியன்’ கருத்துகளைப் பரப்பும் முகநூல்/இணைய பக்கங்கள் முடக்கம்!

Published on 02/08/2017 | Edited on 02/08/2017
ஆன்டி இந்தியன்’ கருத்துகளைப் பரப்பும் முகநூல்/இணைய பக்கங்கள் முடக்கம்!

முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளப்பக்கங்களின் வழியாக ‘ஆன்டி-இந்தியன்’ கருத்துக்களைப் பரப்புவதைத் தவிர்க்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.

இதன்படி, 735 சமூக வலைதள பக்கங்களையும், 596 இணையதள பக்கங்களையும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் முடக்கியுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பி பி சௌத்ரி, மாநிலங்களவையில் இதுகுறித்து அளித்த எழுத்துப்பூர்வமான விளக்கத்தில், ‘கடந்த ஜூன் மாதத்தில் இருந்து ஆன்டி-இந்தியன் கருத்துக்களைப் பகிரும், வெளியிடும் சமூக வலைதள மற்றும் இணைய பக்கங்கள் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளன’ என தெரிவித்துள்ளார்.

பல நீதிமன்றங்களின் வழக்குகள் மற்றும் நிபுணர் குழுவின் பரிந்துரைகளின் படி முடக்கப்பட வேண்டிய பக்கங்களைத் தேர்ந்தெடுத்தோம். தகவல் தொழில்நுட்பங்கள் தேசத்திற்கு எதிராக பயன்படுத்தப்படும்போது அரசுக்கு சரியான நேரத்தில் தகவல் அனுப்பப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தகவல் தொழில்நுட்பச் சட்டம்- 2000 பிரிவு 69 A-ன் படி சட்ட அமலாக்கத்துறை சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளப்பங்களைத் தொடர்ச்சியாக கண்காணித்து வரும். தேசத்திற்கு எதிரான கருத்துகள் பகிரப்படும்போது, அதற்கான அமைப்பு உரிய நடவடிக்கை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்