Skip to main content

“சமூக நீதிக்கு மற்றொரு அங்கீகாரம்...” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 01/08/2024 | Edited on 01/08/2024
Another endorsement for social justice  Chief Minister M.K. Stalin

ஆந்திராவைச் சேர்ந்த ஈ.வி. சின்னையா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அந்த வழக்கில் இடஒதுகீட்டின் போது உள் ஒதுக்கீட்டைக் கொடுக்கக் கூடாது எனத் தெரிவித்திருந்தார். கடந்த 2005 ஆம் ஆண்டு 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இதனை உறுதிப்படுத்தினர். இந்நிலையில் இந்த தீர்ப்பை 7 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இன்று (01.08.2024) ரத்து செய்து உத்தரவிட்டனர்.

மேலும் பட்டியலினத்தில் மிகவும் பின்தங்கியோருக்கு உள் ஒதுக்கீடு வழங்கப் பஞ்சாப் அரசு கொண்டு வந்த சட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 7 நீதிபதிகள் அமர்வில் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் 6 நீதிபதிகள் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனத் தீர்ப்பில் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான சமூக நீதியை நிலைநாட்டும் நமது திராவிட மாடல் பயணத்துக்கான மற்றுமோர் அங்கீகாரமாக இன்றைய உச்சநீதிமன்றத் தீர்ப்பு அமைந்திருக்கிறது.

முறையாகக் குழு அமைத்து, அதன்மூலம் திரட்டப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு அருந்ததியர் சமுதாயத்திற்கான 3% உள்ஒதுக்கீட்டைக் கலைஞர் கொடுக்க - அதற்கான சட்ட முன்வடிவைப் பேரவையில் நான் அறிமுகம் செய்து, நிறைவேற்றித் தந்தோம். இந்தச் சட்டத்தை உச்சநீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு உறுதிசெய்திருப்பது பெருமகிழ்ச்சியளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்