Skip to main content

‘பக்கோடா விற்பது போதாது மோடி ஜி’ – கலாய்க்கும் ஜிக்னேஷ் மேவானி

Published on 15/02/2018 | Edited on 15/02/2018

குஜராத் மாநிலம் வட்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து மோடியை நையாண்டியுடன் விமர்சித்து வருகிறார்.
 

modi


காதலர் தினத்தை முன்னிட்டு ஜிக்னேஷ் போட்டிருந்த பதிவில் ‘பல பேருக்கு நாம ஐ லவ் யூ சொல்லுவோம். ஆனா மோடிக்கு யாரு ஐ லவ் யூ சொல்லுவா? இனிய காதலர் தின வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்திருந்தார்.

இன்று உலக வங்கி வெளியிட்டிருக்கும் அறிக்கையை கோடிட்டு காட்டி மோடியை விமர்சித்துள்ளார் ஜிக்னேஷ் மேவானி. 2047ல் சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகளை நிறைவு செய்யப்போகும் இந்தியா வளர்ச்சிப் பாதைக்கு செல்ல, சுய வேலைவாய்ப்பை நம்பாமல், தொடர்ச்சியான சம்பளம் வரக்கூடிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது உலக வங்கி.

மேலும், ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த சமூகத்தில் அதுபோன்ற ஆக்கப்பூர்வமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுதான் உடனடித் தேவை என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவின் உழைக்கும் வர்க்கத்தில் ஐந்தில் ஒருபங்கு பேர்தான் சம்பளம் தரக்கூடிய வேலைகளில் இருக்கிறார்கள் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

இதைக்குறிப்பிட்டு மோடியை விமர்சித்துள்ள ஜிக்னேஷ் மேவானி ‘மோடி ஜி… இதனால்தான் பக்கோடா விற்பது மட்டும் போதாது என்கிறோம். எங்கள் பேச்சை கேட்காவிட்டாலும் பரவாயில்லை. உலக வங்கி சொல்வதையாவது கேளுங்கள்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சார்ந்த செய்திகள்