Skip to main content

அனில் அம்பானி குற்றவாளி; உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...

Published on 20/02/2019 | Edited on 20/02/2019

 

dsfsfffdsf

 

எரிக்சன் நிறுவனத்திடம் வாங்கிய கடனை அணில் அம்பானி திரும்ப செலுத்தாததால் அவர் மீது அந்நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. கடந்த 2014 ஆம் ஆண்டு இந்த இரு நிறுவனங்களும் இணைந்து பணிபுரிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டன. இந்நிலையில் மின்னணு பொருட்கள் கொள்முதலில் அணில் அம்பானியின் ஆர். காம் நிறுவனம் தங்களுக்கு தரவேண்டிய நிலுவை தொகை 550 கோடி ரூபாயை தரவில்லை என எரிக்சன் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் 2018 டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் ஆர். காம் நிறுவனம் எரிக்சன் நிறுவனத்திற்கு நிலுவை தொகையை வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இதுவரை அந்நிறுவனம் அந்த தொகையை வழங்கவில்லை. மேலும் ஆர். காம் நிறுவனம் திவால் எனவும் அறிவிக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை பின்பற்றாததால் அணில் அம்பானி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது எரிக்சன் நிறுவனம். இதில் அணில் அம்பானி குற்றவாளி என உச்சநீதிமன்றம் தற்போது பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி 550 கோடி ரூபாயில் நிலுவை தொகையான 453 கோடி ரூபாயை 4 வாரங்களுக்குள் எரிக்சன் நிறுவனத்திற்கு தரவில்லை என்றால் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், 3 மாதங்கள் சிறை செல்ல நேரிடும் எனவும் தெரிவித்துள்ளது.   

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனில் அம்பானி மீது கட்டாய நடவடிக்கை எடுக்க மும்பை உயர்நீதிமன்றம் தடை! 

Published on 26/09/2022 | Edited on 26/09/2022

 

Bombay High Court prohibits taking compulsory action against Anil Ambani!

 

வரி ஏய்ப்பு வழக்கில் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானி மீது கட்டாய நடவடிக்கை எதுவும் மேற்கொள்ள வேண்டாம் என வருமான வரித்துறைக்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

ஸ்விஸ் வங்கியில் அவரது பெயரில் உள்ள இரண்டு கணக்குகள் குறித்த விவரங்களை உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே மறைத்ததாகவும், அதனால் 420 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாகவும் அனில் அம்பானி மீது வருமான வரித்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கில் நவம்பர் 17- ஆம் தேதி வரை அவர் மீது எந்தவித கட்டாய நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று வருமான வரித்துறைக்கு உத்தரவிட்ட மும்பை உயர்நீதிமன்றம், இந்த வழக்கில் அவர் மீது குற்ற வழக்குப்பதிவு செய்யவும் தடை விதித்தது. 

 

Next Story

"அம்பானி ஃபைலுக்கு ஓகே சொன்னா 150 கோடி கிடைக்கும்னாங்க" - மேகாலயா ஆளுநர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Published on 22/10/2021 | Edited on 23/10/2021

 

meghalaya governor

 

மேகாலயாவில் ஆளுநராக இருப்பவர் சத்ய பால் மாலிக். இவர் இதற்கு முன்னர் ஜம்மு காஷ்மீரின் ஆளுநராக இருந்தார். இந்தநிலையில் இவர், தான் ஜம்மு காஷ்மீரின் ஆளுநராக இருந்தபோது அம்பானி தொடர்பான கோப்பும், ஆர்.எஸ்.எஸ்ஸை சார்ந்த நபரின் கோப்புக்கும் அனுமதி அளித்தால், கோப்புக்கு தலா 300 கோடி கிடைக்கும் எனத் தனது செயலாளர்கள் தெரிவித்ததாகக் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது; காஷ்மீருக்குச் சென்ற பிறகு, இரண்டு கோப்புகள் (அனுமதிக்காக) என்னிடம் வந்தன. ஒன்று அம்பானியைச் சேர்ந்தது. மற்றொன்று முந்தைய மெஹபூபா முப்தி தலைமையிலான (பிடிபி-பாஜக கூட்டணி) அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த ஆர்எஸ்எஸ்-தொடர்புடைய நபருடையது. அவர் தன்னை பிரதமருக்கு நெருக்கமானவர் எனக் கூறிக்கொண்டார்.

 

இரண்டு துறைகளிலும் ஊழல் இருப்பதாகச் செயலாளர்கள் என்னிடம் தெரிவித்தனர். அதன்படி நான் இரண்டு ஒப்பந்தங்களையும் ரத்து செய்தேன். கோப்புகளை அனுமதித்தால் இரண்டு கோப்புகளுக்கும் தலா 150 கோடி கிடைக்கும் என செயலாளர்கள் என்னிடம் தெரிவித்தனர். ஆனால், நான் ஐந்து குர்தா-பைஜாமாவுடன் வந்தேன். அதனுடைய கிளம்புவேன் என அவர்களிடம் தெரிவித்தேன்.

 

இந்த கோப்புகளுக்குத் தொடர்புடையவர்கள்,பிரதமரின் பெயரைப் பயன்படுத்தியதால், முன்னெச்சரிக்கையாகப் பிரதமரிடம் அந்த கோப்புகளைப் பற்றியும், ஊழல் பற்றியும் தெரிவித்தேன். நான் பதவியை விட்டு வெளியேறத் தயாராக இருக்கிறேன். ஆனால் பதவியில் இருந்தால் இரண்டு கோப்புகளையும் அனுமதிக்க மாட்டேன் எனத் தெரிவித்தேன். இவ்வாறு சத்ய பால் மாலிக் தெரிவித்தார்.

'

மேலும் தான் கூறியதற்குப் பிரதமர் மோடி, ஊழலில் சமரசம் செய்யத் தேவையில்லை எனத் தெரிவித்ததாகக் கூறியதோடு, அதற்காக பிரதமர் மோடியையும்  சத்ய பால் மாலிக் பாராட்டினார்.

 

சத்ய பால் மாலிக், தன்னிடம் வந்து கோப்புகள் குறித்த விவரத்தை விரிவாக விளக்கவில்லை. இருப்பினும் கடந்த 2018 ஆம் ஆண்டு, அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்களுக்குக் காப்பீடு வழங்க அனில் அம்பானியின் ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தோடு ஜம்மு காஷ்மீர் அரசு செய்துகொண்ட ஒப்பந்தத்தை சத்ய பால் மாலிக் இரத்து செய்ததோடு, ஒப்பந்த நடைமுறை வெளிப்படையான மற்றும் நியாயமான முறையில் நடைபெற்றதா என்பதை ஆய்வு செய்ய ஊழல் தடுப்பு பணியகத்திற்குப் பரிந்துரைத்தார். அதுதொடர்பான கோப்பையே சத்ய பால் மாலிக் தற்போது குறிப்பிட்டதாகக் கருதப்படுகிறது.