உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை 12 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 26 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.
உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவைப் பொறுத்தமட்டில் மராட்டியம், தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் கரோனா மிக வேகமாகப் பரவியது. ஆரம்பத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த ஆந்திராவில் தற்போது கரோனா வெகுவாகக் குறைந்து வந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 218 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை அங்கு 8,91,720 பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 7,186 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் 117 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 4 பேர் இன்று மட்டும் இந்த நோய்த் தாக்குதலால் பலியாகியுள்ளனர். 8,80,954 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழப்பு படிப்படியாக குறைந்து வருவது அம்மாநில மக்களுக்கு ஒரு ஆறுதல் அளிக்கும் செய்தியாக உள்ளது.