ஆம்புலன்சில் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறப்பு
கோலார் சிந்தாமணி தாலுகா சித்தபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடலட்சுமியம்மா. நிறைமாத கர்ப்பிணியான இவர் சிந்தாமணி தாலுகா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். பின்னர் கோலார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என மருத்துவர் தெரிவித்தார். இதனால் ஆம்புலன்ஸ் மூலம் வெங்கடலட்சுமியம்மாவை அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இவருக்கு பிரசவ வலி அதிகரித்து. சிறிது நேரத்தில் அவருக்கு ஆழகான பெண் குழந்தை பிறந்தது.