சிபிஐ இயக்குனர் பொறுப்பிலிருந்து அலோக் வர்மா கடந்த ஆண்டு அதிரடியாக நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து தன்னை பதவி நீக்கம் செய்தது செல்லாது என அலோக் வர்மா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் அலோக் வர்மாவை மீண்டும் பணிக்கு செல்லலாம் என உத்தரவிட்டது. மேலும் அவரை பணியமர்த்துவது குறித்து சிறப்பு நியமன குழு தீர்மானித்து கொள்ளலாம் என அறிவித்தது. அதன்படி பிரதமர் மோடி, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தனது பிரதிநிதியாக நியமித்த நீதிபதி ஏ.கே. சிக்ரி ஆகியோர் கொண்ட மூவர் குழு நேற்று இது பற்றி விவாதித்தது. அதில் அலோக் வர்மாவை பதவியிலிருந்து நீக்குவது என முடிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அவருக்கு தீயணைப்பு துறை இயக்குனர் பொறுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த அவர் புதிதாக வழங்கப்பட்ட பொறுப்பை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.