Published on 21/11/2019 | Edited on 21/11/2019
நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களில் சுமார் 3.14 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேபோல் மாவட்ட நீதிமன்றங்களில் 10 ஆண்டுகளுக்கும் மேல் சுமார் 23.90 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் சுமார் 9 லட்சம் வழக்குகள் 10 ஆண்டுகளுக்கும் மேல் நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
தமிழகத்தில் மட்டும் 34,037 வழக்குகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளதாகவும், உயர்நீதிமன்றங்களில் 44.76 லட்சம் வழக்குகளும், உச்சநீதிமன்றத்தில் சுமார் 60,000 வழக்குகளும் நிலுவையில் உள்ளதாக கூறியுள்ளது.