Published on 11/11/2019 | Edited on 11/11/2019
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கட்டுமான நிறுவனம் உட்பட சில நிறுவனங்கள் ரூபாய் 3,300 கோடி ஹவாலா மோசடி செய்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. மேலும் ஈரோடு கட்டுமான நிறுவனம் உள்ளிட்ட சில நிறுவனங்களில் நவம்பர் மாதம் முதல் வாரம் சோதனை நடத்தப்பட்டதாக கூறியுள்ளது.
தமிழகத்தை தொடர்ந்து மும்பை, ஆக்ரா, ஹைதராபாத், டெல்லி, மும்பை, கோவா, உள்ளிட்ட 42 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் ஆந்திராவில் முக்கிய நபர் ஒருவருக்கு ரூபாய் 150 கோடிக்கும் மேல் ரொக்கமாக தரப்பட்டது சோதனையில் அம்பலமாகியுள்ளது. வருமான வரித்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் கணக்கில் காட்டாத ரூபாய் 4.19 கோடி, ரூபாய் 3.2 கோடி நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.