மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தேர்தல் பிரச்சாரங்களும் நாடு முழுவதும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

அதுபோல தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கைகளும் அனைத்து கட்சிகளாலும் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. ஆனால் பாஜக தேர்தல் அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.
இதனை கிண்டல் செய்யும் வகையில், "பிரதமரின் தேர்தல் அறிக்கை வெளிவரும் அந்த நல்ல நாள் தேர்தல் முடிந்த பிறகாவது வருமா? இந்த நேரம் வரையில்கூட பாஜக ஆதரவாளர்களால் 'அந்த நல்ல நாள்' எப்பொழுது வரும் என சொல்ல முடியாத நிலைதான் தொடர்கிறது. பாஜகவுக்கான கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது" என அகிலேஷ் யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.