மக்களவை தேர்தலில் வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரின் பெயரை அக்கட்சி அறிவித்துள்ளது.
மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் மூன்று கட்ட தேர்தல் முடிந்த நிலையில், 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கான பிரச்சாரங்கள் நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என கணிப்புகள் நிலவி வந்த நிலையில் மோடியை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் அஜய் ராய் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாரணாசியில் வசித்து வரும் இவர் 5 முறை அங்கிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். மேலும் வாரணாசி தொகுதியில் பலம் வாய்ந்த காங்கிரஸ் பிரமுகராக அறியப்பட்ட இவர் தற்போது மோடியை எதிர்த்து போட்டியிடுகிறார்.