ஏர் இந்தியா விமான நிறுவனம் அதில் பயணம் செய்வோருக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
அதன்படி வெடிக்கும் ஆபத்து இருக்கும் பழைய மாடல் 15 அங்குல மேக்புக் டேப்களை விமானப்பயணத்தின் போது எடுத்துவர வேண்டாம் என தெரிவித்துள்ளது. 2015 லிருந்து 2017 ஆண்டுகளுக்குள்ளான இடைப்பட்ட காலங்களில் விற்பனை செய்யப்பட்ட மேக்புக் டேப்களின் பேட்டரிகள் வெடிக்கும் அபாயம் இருப்பதாக சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் அறிவித்தது.
இதனை அமெரிக்க பெஃடரல் விமானப் போக்குவரத்து நிர்வாகம் ஏற்றுக்கொண்டு, அமெரிக்காவில் உள்ள அனைத்து சிவில் விமானங்களிலும்ட இந்த மாடல் கணினி லேப் டாப்களை எடுத்துச்செல்ல தடை விதித்தது. இந்த நியதில் ஏர் இந்தியா நிறுவனமும் இது தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி செப்டம்பர் 2015 முதல் பிப்ரவரி 2017 வரை வாங்கப்பட்ட, 15 அங்குல செக்-இன் அல்லது கையில் எடுத்துச் செல்லக்கூடிய ஆப்பிள் மேக் புக் ப்ரோ டேப்பை விமானப் பயணத்தின்போது எடுத்துச் செல்ல வேண்டாம் எனவும், அதில் உள்ள லித்தியம் பேட்டரிகள் எனவே அபாயத்தை ஏற்படுத்தக் கூடியவை எனவும் எச்சரித்துள்ளது.