Skip to main content

ராபர்ட் வதேரா வழக்கில் நீதிமன்றம் புதிய உத்தரவு...

Published on 16/02/2019 | Edited on 16/02/2019

 

fggfhgfh

 

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேரா மீது அமலாக்கத்துறை சார்பில் தொடரப்பட்ட பணமோசடி வழக்கு நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு மற்றும் பெட்ரோலிய துறை ஒப்பந்தங்களில் பணம் பெற்றது,19 லட்சம் பவுண்ட் செலவில் அவர் லண்டனில் வீடு வாங்கியது தொடர்பான இந்த வழக்கில் ராபர்ட் வதேராவுக்கு முன் ஜாமீன் வழங்கி பாட்டியாலா நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணைகளில் ஆஜராகி வந்தார் வதேரா. இந்நிலையில் தற்போது வரும் மார்ச் 2-ம் தேதி வரை அவரின் முன்ஜாமின் நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் 2-ம் தேதி வரை வதேராவை கைது செய்ய தடை விதித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு வழங்கியது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்மிருதி இராணிக்கு போட்டியாக பிரியங்கா காந்தியின் கணவர்?

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Priyanka Gandhi's husband to compete with Smriti Rani?

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அந்த வகையில், 80 மக்களவைத் தொகுதிகள் உத்தரப் பிரதேச மாநிலத்தில், ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25, ஜூன் 1 என ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் பா.ஜ.க சார்பில் மீண்டும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி போட்டியிடுகிறார். ஆனால், அதே வேளையில், அவரை எதிர்த்து போட்டியிட உள்ள காங்கிரஸ் வேட்பாளர் குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை. 

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா, அமேதி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். ராபர்ட் வதேரா தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், “அமேதி தொகுதி மக்கள் தங்கள் தவறை புரிந்துகொண்டு விட்டார்கள். அமேதியின் தற்போதைய எம்.பி.யான ஸ்மிருதி ராணி விஷயத்தில் மக்கள் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள். ராகுல் காந்திக்கு பதிலாக ஸ்மிருதி ராணியை தேர்ந்தெடுத்தற்காக அமேதி மக்கள் மனம் வருந்துகிறார்கள். 

சோனியா காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அமேதியின் எம்.பி.யாக வேண்டும் என்று அம்மக்கள் விரும்புகிறார்கள் என்றே நான் எண்ணுகிறேன். நான் அரசியலில் இணைந்தால், அமேதி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று அந்த தொகுதி மக்கள் என்னிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்” என்று கூறினார்.

2004, 2009 மற்றும் 2014 ஆகிய மக்களவைத் தேர்தல்களில் அமேதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராகுல் காந்தி, கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலின் போது தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஸ்மிருதி ராணியிடம் தோல்வி அடைந்தார். அமேதி, வயநாடு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி, வயநாடு தொகுதியில் அதிகபட்ச வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

ஸ்மிருதி ராணி என்னை பற்றி பேசுவதை நிறுத்த வேண்டும் ; ராபர்ட் வத்ரா

Published on 12/08/2023 | Edited on 17/08/2023

 

Smriti Rani should stop talking about me; Robert Vadra

 

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று கூறி எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் கடந்த 8 ஆம் தேதி மக்களவையில் தொடங்கியது. இந்த விவாதத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கலந்து பேசுகையில்,  “கடந்த முறை நான் பேசியபோது அதானி விவாகரத்தில் கவனம் செலுத்தியதால் உங்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தியிருக்கலாம். அப்போது நான் உண்மையைத் தான் சொன்னேன்.இன்று என் பேச்சு அதானி பற்றியது இல்லை என்பதால் பா.ஜ.க  நண்பர்கள் பயப்படத் தேவையில்லை” என்று கூறினார்.

 

அதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி, அதானியும் பிரியங்கா காந்தியின் கணவரான ராபர்ட் வத்ராவும் ஒன்றாக நின்று கொண்டிருக்கும் புகைப்படத்தைக் காட்டி தனது விவாதத்தைத் தொடங்கிப் பேசினார். அப்போது, 1993 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் அதானிக்காக முந்த்ரா துறைமுகத்தில் இடம் கொடுத்தனர். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் அதானி நிறுவனத்துக்கு ரூ.72,000 கோடி கடன் கொடுத்தனர். காங்கிரஸ் ஆட்சியில் அதானிக்கு பல்வேறு மாநிலங்களில் துறைமுகப் பணிகள் கொடுக்கப்பட்டது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். இதே போல், கடந்த பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரிலும் அதானியுடன்  ராபர்ட் வத்ரா இருந்த புகைப்படத்தை பா.ஜ.க வெளியிட்டு விமர்சித்திருந்தது.

 

இந்த நிலையில், தொழிலதிபர் ராபர்ட் வத்ரா மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி   நாடாளுமன்றத்தில் அவரை பற்றி மறைமுகமாக குறிப்பிட்டதைக் கண்டித்துள்ளார். இது குறித்து தனியார் செய்தி ஊடகத்தில் பேசிய அவர், “ மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ஆனால், ஸ்மிருதி ராணி அதைப் பற்றி பேசாமல் என்னைப் பற்றி எதிர்மறையான விமர்சனங்களைப் பேசி வருகிறார். அதனால் என் பெயரை தவறாக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

 

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இ.ந்.தி.யா. கூட்டணி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வலுவான போட்டியை கொடுக்கும்.  காங்கிரஸ் இணைந்துள்ள இ.ந்.தி.யா என்ற எதிர்கட்சிக் கூட்டணி அவர்களுக்கு நல்ல போட்டியை வழங்குவோம்.  எனது மனைவி பிரியங்கா காந்தி  நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அதற்கான அனைத்து திறமைகளும் அவருக்கு உள்ளது.  நாடாளுமன்றத்தில் அவர் சென்றால் சிறப்பாக பணியாற்றுவார். காங்கிரஸ் கட்சி அதை ஏற்று சிறப்பாக திட்டமிடும் என நம்புகிறேன்” என்று கூறினார்.