அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை பிரணிதா முதல் கட்டமாக அப்பள்ளிக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளார்.
பிரபல கன்னட நடிகை பிரணிதா, தமிழில் உதயன், சகுனி, மாசு என்கிற மாசிலாமணி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியை அவர் தத்தெடுப்பதாக அறிவித்திருந்தார். அதன்படி முதல் கட்டமாக அந்த பள்ளியின் மேம்பாட்டிற்கு ரூ.5 லட்சம் நிதியை, அரசு பள்ளிகள் பாதுகாப்பு குழு தலைவர் அனில்ஷெட்டியிடம் பெங்களூருவில் புதன்கிழமை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து பேசிய பிரணிதா, மாற்றத்திற்காக கற்பித்தல் என்ற அமைப்பில் சேர்ந்து, அரசு பள்ளியில் பாடம் நடத்தியிருக்கிறேன். அப்போது தான், அரசு பள்ளிகள் மிக மோசமான நிலையில் இருப்பதை கண்டேன். குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு என்று தனியாக கழிவறை கிடையாது. இதனால் பெண் குழந்தைகள் பள்ளிக்கு வர தயங்கினார்கள். அரசுப் பள்ளியில் அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால்தான் அரசு பள்ளியை தத்தெடுக்க முடிவு செய்தேன் என தெரிவித்தார்.