கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள சூடைக் காந்த பள்ளி எனும் கிராமத்தைச் சேர்ந்த சுவாதியும், இளைஞர் நந்தீஸ் என்பவரும் காதலித்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சாதி என்பதால் இதற்கு பலத்த எதிர்ப்பு இருந்துள்ளது. இந்நிலையில் மூன்று மாதங்களுக்கு முன்பு ஊரைவிட்டு சென்று இருவரும் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டனர். திருப்பூரில் தங்களது வாழ்க்கையை நடத்திவந்த இருவரும் 13.11.2018 அன்று கர்நாடகா, மாண்டியா பகுதியில் பிணமாக கரை ஒதுங்கினர். உடலை கைப்பற்றிய காவல்துறையினர் அவர்கள் அந்த தம்பதியினர்தான் என்பதை உறுதிபடுத்தினர். பிணக்கூறாய்வில் இருவரும் அடித்துக் கொல்லப்பட்டிருப்பதும், சுவாதி மூன்றுமாதக் கர்ப்பிணி என்பதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கர்நாடக காவல்துறையினர், எஸ்.சி, எஸ்.டி, வன்கொடுமை தடுப்புப் பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.